வாக்களிக்க செல்லும் போது எடுத்துச் செல்ல கூடாத விடயங்கள் : வெளியான அறிவிப்பு
வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையத்திற்கு செல்லும் போது எடுத்துச் செல்லக்கூடாத விடயங்கள் குறித்து வாக்காளர்களுக்கு காவல்துறையினர் அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளனர்.
குறித்த அறிவுறுத்தலை காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ இன்று (19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “குடிமக்கள் செல்லும் போது நிதானமாக இருக்க வேண்டிய பொறுப்பு உள்ளது.
வாக்குச்சாவடி
காலையில் மது அருந்திவிட்டு வாக்குச்சாவடிக்குள் நுழைய முடியாமல், முடிவெடுக்க முடியாமல் திணறுபவர்கள் இருப்பதை நம் அனுபவத்தில் பார்த்துள்ளளோம்.
அத்தோடு, வாக்குச்சாவடிகளில் உள்ளவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வாக்குச்சாவடிக்கு வர வேண்டும்.
மேலும், சிலர் கூரிய ஆயுதங்கள் மற்றும் சிறு கத்திகள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு வாக்களிக்க வரும் சம்பவங்களை நாங்கள் அனுபவித்திருக்கிறோம்.
ஒரு வேளை நீங்கள் வேலைக்குச் சென்று வாக்களிக்க செல்வீர்களானால் இது போன்ற செயல்களைச் செய்யாதீர்கள்.
எனவே இது போன்ற சிறிய சம்பவம் வாக்குச்சாவடியை சீர்குலைத்தால், அது முழு வாக்குப்பதிவு செயல்முறையையும் தடுக்கலாம்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |