கணேமுல்ல சஞ்சீவ படுகொலை : பெண் தொடர்பில் காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்படும் பெண் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு காவல்துறை வெகுமதியை அறிவித்துள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சந்தேக நபருக்கு உதவியவர் ஒரு பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் படுகொலை சநதேக நபருக்கு துப்பாக்கியை கொண்டு வந்தவர் எனவும் நீர்கொழும்பைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி எனவும் அடையாளம் கண்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
எப்படி துப்பாக்கியை கொண்டு வந்தார்
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியான ரிவோல்வரை, சந்தேகத்திற்குரிய பெண், துப்பாக்கியின் வடிவத்தில் பக்கங்களை வெட்டி, ஒரு குழிவான புத்தகத்திற்குள் மறைத்து நீதிமன்ற வளாகத்திற்குள் கடத்தி வந்ததை அவர் உறுதிப்படுத்தினார். நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய பல வாயில்கள் உள்ளன, நடந்த சம்பவத்தின் குழப்பங்களின் மத்தியில் தாக்குதல் நடத்தியவர் அருகிலுள்ள வாயிலிலிருந்து தப்பி ஓடிவிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பில் இருவரை சுட்டுக் கொன்றவர்
இதேவேளை சட்டத்தரணி வேடத்தில் வந்து அளுத்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுகொன்ற துப்பாக்கிதாரி, கடந்த மாதம் 7 ஆம் திகதி கல்கிஸ்ஸை, வட்டரப்பல பகுதியில் இரண்டு பேரை சுட்டுக் கொன்ற அதே துப்பாக்கிதாரி எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

