புத்ததாண்டு கொண்டாட்டத்தில் மோதல்! சகோதரனை காப்பாற்ற முயன்ற காவல்துறை உத்தியோகத்தர் படுகொலை
சித்திரை புத்தாண்டு விழா ஒன்றில் இடம்பெற்ற மோதலின்போது, தனது சகோதரனை காப்பாற்ற முயன்ற காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம், அம்பாந்தோட்டை - வலஸ்முல்ல காவல்துறை பிரிவுற்குட்பட்ட போவல பகுதியில் நேற்று (24. 04.2026) இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கொல்லப்பட்டவர், மாளிகாவத்தை காவல் நிலையத்தில் கடமையாற்றி வந்த, அம்பாந்தோட்டை - வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலை
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், புத்தாண்டு விழா நடைபெற்ற இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த தனது சகோதரனை ஒரு குழுவினர் தாக்குவதாகக் கிடைத்த தகவலையடுத்து, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி தனது காரில் அந்த இடத்திற்குச் சென்றுள்ளார்.

பின்னர், அங்கு தனது சகோதரனைக் காப்பாற்ற முயன்றபோது, எதிர்த்தரப்பைச் சேர்ந்த ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட கூர்மையான ஆயுதத் தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில், வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கும், அதன் பிறகு கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டுள்ளார்.
அதனைதொடர்ந்து, கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக வலஸ்முல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், உயிரிழந்த அதிகாரியின் இறுதிக்கிரியைகள் நாளை (26.04.2026) காவல்துறை மரியாதையுடன் நடைபெறவுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்