காதலர் தின கொண்டாட்டங்கள் தொடர்பில் காவல்துறையினர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
காதலர் தினத்தில் சிறுவர்களையும், இளைஞர்களையும் இலக்குவைத்து பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்படும் விருந்துபசார நிகழ்வுகள் தொடர்பில் காவல்துறையினர் அவதானத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை, காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
விருந்துபசாரங்களை மேற்கொள்வதற்கும், ஏற்பாடு செய்வதற்கும் தடை விதிக்கப்படவில்லை என்றாலும், கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட சம்பவங்களினால், காவல்துறையினர் விழிப்புடன் இருப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
விருந்துபசார நிகழ்வுகள் சோதனை செய்யப்படும்

முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் ஊடாக ஏற்பாடு செய்யப்படும் விருந்துபசாரங்கள் மற்றும் நிகழ்வுகளை தேவையேற்படின் சோதனை செய்வதற்கு காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
விருந்துபசாரங்களில் பங்கேற்பவர்கள் போதைப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்களா என்பது தொடர்பிலும், காவல்துறையினர் சோதனை செய்வார்கள் என காவல்துறை பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.