அதிகாலையிலேயே காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு!
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Dhilak
பிலியந்தலை - வீரசிங்க மாவத்த பகுதியில், சந்தேகத்திற்குரிய இரு நபர்களை சோதனையிட்டுக் கொண்டிருந்தபோது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு ஒன்றை நடத்தியுள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூடானது, இன்று(19) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர்களில் ஒருவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
காவல்துறையினரின் தகவலின்படி, சந்தேகத்திற்குரிய இரண்டு நபர்களை நிறுத்தி சோதனையிட அதிகாரிகள் முயன்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த நிலையில், இரண்டாவது சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளதுடன், அவரை கைது செய்ய மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |