பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் பொதுமக்கள் தொடர்பு பிரிவிற்கு மாற்றம்!
srilanka
police
colombo
By Vasanth
பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிவந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ பொலிஸ் ஊடகப் பிரிவு மற்றும் பொது மக்கள் உறவுகள் பிரிவுக்கு பொறுப்பான பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரின் அனுமதியுடன் பொலிஸ் மா அதிபர் இந்த நியமனத்தை வழங்கியதுடன், நேற்று முன்தினம் அவர் பொலிஸ் தலைமையகத்தில் உள்ள அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
பொலிஸ் ஊடக பிரிவின் பதில் பணிப்பாளராக புத்திக மனதுங்க செயற்பட்டு வந்த நிலையில், அப்பிரிவுக்கு நிரந்தர பணிப்பாளர் ஒருவர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
2019ஆம் ஆண்டு யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எனினும், பிரதி பொலிஸ்மா மா அதிபர் அஜித் ரோஹண தொடர்ந்தும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பதவியில் நீடிப்பார்.