தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இருந்த ஒலிபெருக்கி உபகரணங்களை அகற்றிய காவல்துறை
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில், உரிய அனுமதியின்றிப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி ஒலிபெருக்கி சாதனங்களை யாழ்ப்பாணப் காவல்துறையினர் அகற்றி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரத்தின் 4ஆம் நாள் நிகழ்வுகள் நினைவிடத்தில் அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே இச்சம்பவம் அரங்கேறியுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திடீரென நினைவிடத்திற்கு வந்த யாழ்ப்பாணப் காவல்துறையினர் , பொது இடத்தில் ஒலிபெருக்கி சாதனங்களை இயக்குவதற்கு முறையான மற்றும் சட்டபூர்வமான அனுமதி பெறப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.
நினைவேந்தல் நிகழ்வுகள்
இதனைத் தொடர்ந்து, அங்கிருந்த ஒலிபெருக்கிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகரணங்களை உடனடியாகக் கழற்றி, காவல்துறை வாகனத்தில் ஏற்றி எடுத்துச் சென்றுள்ளனர்.

நினைவேந்தல் நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்த வேளையில் காவல்துறையினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கை, அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியிலும் அப்பகுதியிலும் சிறிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |