இரண்டு வருடங்களுக்கு முன்னர் காணாமற்போன பெண் : பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் காணாமற்போன பெண்ணை கண்டுபிடிக்க காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
மத்தேகொட காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரே கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் திகதி முதல் முதல் காணாமல் போயுள்ளார்.
மத்தேகொட காவல் நிலையத்தில் முறைப்பாடு
இது தொடர்பாக அவரது கணவர் மத்தேகொட காவல்நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 59 வயதுடைய குறித்த பெண்ணுக்கு நீண்ட கூந்தல் இருப்பதாகவும், சுமார் 5 அடி உயரம் கொண்டவராகவும் , அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை
இதுவரை அவர் குறித்து எந்த தகவலும் வெளியாகாததால், அந்தப் பெண்ணைக் கண்டுபிடிப்பதற்கு மத்தேகொட காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
அவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. தொலைபேசி எண்கள் OIC/ மத்தேகொட – 0718592207 மத்தேகொட காவல் நிலையம் – 0112783776
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
