வெடுக்குநாறி மலையில் விசேட வழிபாடு : பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
வவுனியா - நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இந்துக்களும் பௌத்த தேரர் தலைமையிலான குழுவும் வழிபாடுகளை முன்னெடுத்துள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த பகுதியில் காவல்துறையினரும் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தொல்பொருள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்புக்கு மத்தியில் வெடுக்குநாறி மலையில் தமிழ் மக்கள் வழிபாடுகளை முன்னெடுத்து வரும் நிலையில் இன்று (25) இந்துக்கள் புரட்டாதிச் சனி விசேட வழிபாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
பாதுகாப்பு பணிகள்
அதேநேரம் கல்கமுவ சாந்தபோதி தேரரும் வெடுக்குநாறிமலையில் வழிபாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் குழப்பங்கள் ஏற்படலாம் என்ற காரணத்தால் காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிறீதரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரும் வெடுக்குநாறிமலையில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |