பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக அறிமுகமாகவுள்ள புதிய திட்டம்!
இலங்கையில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் முதல் புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்தார்.
அதன்படி அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 01 ஆம் திகதி முதல் இதற்கென சிறப்பு மூன்று இலக்க தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
காவல்துறையினருடன் இணைக்கபடவுள்ளது
“இந்த தொலைபேசி விளக்கமானது காவல்துறையினருடன் இணைக்கபடவுள்ளதாக காவல்துறை மா அதிபரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், நம் நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் பல்வேறு வகையான துஷ்பிரயோகங்களை சமாளிக்க முடியும்.
24 மணிநேர சேவை
இந்த இணைப்பினூடாகப் பெறப்படும் அழைப்புகளுக்கு பதிலளிப்பதற்காக பெண் காவல்துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பெண்கள் தங்கள் வழக்கை ஒரு ஆண் அதிகாரியிடம் விளக்குவதற்கு சங்கடமாக இருக்கும் நிலை உருவாகாமல் இருப்பதற்காகவே இந்த முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
24 மணிநேரமும் செயற்படும் இந்த சேவையில் எந்நேரமும் பெண் அதிகாரிகளை மட்டுமே ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது." என அவர் தெரிவித்தார்.