தெற்கில் ஏற்பட்ட அரசியல் சிந்தனை மாற்றம் வடக்கு கிழக்கிலும் ஏற்பட வேண்டும்: மன்னார் ஆயர் வலியுறுத்து

Sri Lankan Tamils Tamils General Election 2024 Sri Lanka General Election 2024
By Shadhu Shanker Oct 22, 2024 10:53 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

தெற்கில் ஏற்பட்ட அரசியல் சிந்தனை மாற்றம் வடக்கு கிழக்கிலும் இந்தத் தேர்தலில் ஏற்பட வேண்டும் என்பது பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் என்றுமில்லாதவாறு அதிக வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள இத்தேர்தல் பொதுமக்கள் மத்தியில் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு அறிக்கையை நிராகரிக்கும் கத்தோலிக்க திருச்சபை

உயிர்த்த ஞாயிறு அறிக்கையை நிராகரிக்கும் கத்தோலிக்க திருச்சபை

மீண்டுமொரு தேர்தல்

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ''இலங்கை நாட்டு மக்களாகிய நாம் மீண்டுமொரு தேர்தலை எதிர்நோக்கி நிற்கின்றோம். ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு இப்போது நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கின்றோம்.

தெற்கில் ஏற்பட்ட அரசியல் சிந்தனை மாற்றம் வடக்கு கிழக்கிலும் ஏற்பட வேண்டும்: மன்னார் ஆயர் வலியுறுத்து | Political Change In North Expected Soon

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. வடக்கு மாகாணத்தில் வன்னி தேர்தல் மாவட்டம் மற்றும் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம் என இரண்டிலுமாகச் சேர்த்து குறித்தொதுக்கப்பட்டுள்ள 12 ஆசனங்களுக்காக 45 அரசியல் கட்சிகளும், 46 சுயேச்சைக் குழுக்களும் களமிறங்கியுள்ளன.

வேட்பாளர்கள் என்ற அடிப்படையில் 800க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து வருகின்ற இந்த நாடாளுமன்றத் தேர்தலானது இலங்கை முழுவதும் குறிப்பாக வடக்கு கிழக்குப் பகுதியாகிய தமிழர் தாயகப் பகுதியிலும் பலத்த எதிர்பார்ப்புக்கள் நிறைந்த தேர்தலாக அமைந்துள்ளது.

உரிமை மறுப்புக்கு இலக்கான சிறுபான்மை மக்களாகிய நாம் நமது அனைத்து உரிமைகளையும் பெறுவதற்குரிய ஆகக்கூடிய வழிமுறை அரசியல்தான். இந்த அரசியல் பிரதிநிதிகளாக போட்டியிடுகின்ற அனைவரும் இதன் கனதியை உணர்ந்தவர்களா என்பது கேள்விக்குறியே.

உதய கம்மன்பில மீது பழியை போட்டுவிட்டு அநுர தப்பிக்க முடியாது: சுகாஷ் காட்டம்!

உதய கம்மன்பில மீது பழியை போட்டுவிட்டு அநுர தப்பிக்க முடியாது: சுகாஷ் காட்டம்!

திருப்புமுனைகள் நிறைந்த காலகட்டம்

தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனைகள் நிறைந்த ஒரு காலகட்டத்தில் நாம் நிற்கின்றோம். ஜனாதிபதித் தேர்தலின்போது தெற்கில் ஏற்பட்ட அரசியல் சிந்தனை மாற்றம் வடக்கு கிழக்கிலும் இந்தத் தேர்தலில் ஏற்பட வேண்டும் என்பது பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது.

தெற்கில் ஏற்பட்ட அரசியல் சிந்தனை மாற்றம் வடக்கு கிழக்கிலும் ஏற்பட வேண்டும்: மன்னார் ஆயர் வலியுறுத்து | Political Change In North Expected Soon

அதேவேளையில் என்றுமில்லாதவாறு அதிக வேட்பாளர்கள் களமிறங்கியுள்ள இத்தேர்தல் பொதுமக்கள் மத்தியில் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதையும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதையும் வாக்காளர்கள் தமது கவனத்தில்கொண்டு செயற்பட வேண்டும். 30 வருட அகிம்சைப் போராட்டமும், 30 வருட ஆயுதப்போராட்டமும் எதற்காக ஏற்பட்டனவோ அந்தக் காரணங்கள் இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளன.

சர்ச்சையை கிளப்பிய கம்மன்பில: அநுர மீதான கர்தினாலின் நிலைப்பாடு

சர்ச்சையை கிளப்பிய கம்மன்பில: அநுர மீதான கர்தினாலின் நிலைப்பாடு

மாறிவரும் அரசியல்

இந்நிலையில், 1. நமது நாளாந்த பொருளாதார மற்றும் வாழ்வியல் தேவைககள் என்றுமில்லாதவாறு மேலோங்கி நிற்கும் இவ்வேளையில், அவற்றை மட்டும் கருத்தில்கொள்ளாமல் நாம் இதுவரை காலமும் போராடிவந்த அரசியல் உரிமைகளை நாடாளுமன்றம் ஊடாக வென்றெடுக்கக்கூடிய நபர்களுக்கே நாம் வாக்களிக்க வேண்டும்.

தெற்கில் ஏற்பட்ட அரசியல் சிந்தனை மாற்றம் வடக்கு கிழக்கிலும் ஏற்பட வேண்டும்: மன்னார் ஆயர் வலியுறுத்து | Political Change In North Expected Soon

2. தமிழ் மக்களாகிய நாம் நமது சுயநிர்ணய உரிமை உட்பட காலாகாலமாக நாம் வலியுறுத்திவருகின்ற தமிழ் மக்களின் அடிப்படைக் கோட்பாடுகளை தொடர்ந்து முன்னகர்த்திச் செல்லக்கூடியவர்களுக்கே நாம் வாக்களிக்க வேண்டும்.

3. உறவினர், ஊரவர். நண்பர் போன்ற வட்டங்களைக் கடந்து செயற்படக்கூடிய, தமிழ்த் தேசியத்தை முன்னிலைப்படுத்தக்கூடிய, இலஞ்ச ஊழலற்ற, செயற்திறன்வாய்ந்த, சொல்லுக்கும் செயலுக்கும் ஒத்திசைவுள்ள நபர்களுக்கே நாம் வாக்களிக்க வேண்டும்.

மாறிவரும் அரசியல், பொருளாதார, சமூக சூழ்நிலைகளுக்கு ஏற்ப தேர்தல் தொடர்பான, சமகால அரசியல் தொடர்பான நமது பார்வையிலும் கண்ணோட்டத்திலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும்.

ஒளிமயமானதொரு எதிர்காலத்தை நமக்குக் கொண்டுவரக்கூடிய ஒரு தீர்மானமிக்க தேர்தலாக இது அமைவதற்கு நாம் எல்லோரும் நமது வாக்குரிமையைத் தவறாது பயன்படுத்துவோமாக. நமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் மிகுந்த பொறுப்புணர்வோடு செயற்படுவோமாக!''  என குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
Gallery
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019