கரந்தெனிய சுத்தாவின் சிலிப்பர் செல் ஐய கொலைகளும் கிளிநொச்சி அரசியல் வலன்டையன் நாளும்!
இன்று பெப்ரவரி 14! வலன்டையன் டே எனப்படும் காதலர் தினத்துக்குரிய இந்த நாளை மையப்படுத்தியோ என்னவோ தமிழரசுக்கட்சியும் இருவேறு அரசியல் காதல் காட்சிகளை கிளிநொச்சியில் வெளிப்படுத்தியது.
இதில் முதலாவது காட்சியாக சுமந்திரனின் அண்மைய அரசியல் பசூக்கா அடிகளால் சீற்றமுற்ற சிறிதரன் தரப்பின் எதிர்வினையாகவும் இரண்டாவது காட்சி சுமந்திர ஆதரவாளர்களால் ஒட்டப்பட்டதாக கருதப்படும் இராணுவமயமாக்கலுக்கு துணைபோகாதே என பெயரும் இல்லாத ஊரும் இல்லாத ஒரு மொட்டையான வசனத்தை தாங்கிய சுவரொட்டிகளை மையப்படுத்தியதாக இருந்தது.
இன்று காலை கிளிநொச்சி கூட்டுறவு சங்க மண்டபத்தில் இடம்பெற்ற இந்த சிறிதரன் ஆதரவு ஒன்று கூடலில் தமிழரசு முகங்கள் எவரையும் அதிகம் காண முடியில்லை. சில விதிவிலக்குகள் இருந்தன.
இன்றைய ஒன்று கூடலில் பங்கெடுக்க திட்டமிட்டவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் கட்சியின் பொதுச்செயலாளர் என்ற வகையில் சுமந்திரனின் அறிவிப்பு சிறிலங்காவின் பயங்கரவாத சட்டம் விதிகள் போட்ட குட்டி விதிகள் போலவந்த நிலையில் இந்த காட்சி இருந்தது.
வடக்கின் இந்த அரசியலுக்கு மத்தியில் தமிழர்களின் அல்லைப்பிட்டி பகுதியில் வாகனத்தை நிறுத்தாத ஒரு பதின்மவயதுக்காரை அந்த இடத்திலேயே சுட்டுக்கொன்று சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியதான நெஞ்சுநிமிர்வில் இருக்கக்கூடிய சிறிலங்கா பாதுகாப்புத்தரப்புக்கு தமது முப்படைகளின் புதிய தலையமையக வளாகம் இருக்கும் இடத்துக்கு அருகில் ஒரு சட்டவாளரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொன்ற ரி -56 கொலையாளிகளை மட்டும் குறிபார்த்து சுட்டு பிடிக்க முடியாத நிலையும் இருந்த நிலையில் இந்தவிடயங்களை தாங்கிவருகிறது செய்திவீச்சு...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |