இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்க வேண்டும் : அதிபரின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை..!
அதிபரின் நேர்காணலை அடிப்படையாகக் கொண்டு சிங்கள வாக்குகளை மட்டும் இலக்கு வைத்து வெற்றி பெறுவதற்கு அதிபர் முற்படுகின்றார் எனக் கூறுவது தவறாகும்.
இவ்வாறு வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.
ஜேர்மனிய ஊடகத்திற்கு அதிபர் அண்மையில் வழங்கிய நேர்காணல் தொடர்பில், பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அதற்கு பதிலளிக்கும் முகமாகவே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
அதிபரின் நேர்காணல்
“அதிபர் ரணில் விக்ரமசிங்க ஜேர்மன் ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணல் தொடர்பில் முதலில் தெளிவுப்படுத்த வேண்டியுள்ளது.

அதிபர் ரணில் விக்ரமசிங்க ஒரு இனத்தின் வாக்குகளை மட்டும் இலக்கு வைத்து செயற்படும் நபர் அல்லர்.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அவர் இருக்கின்றார். இது தொடர்பான அவரின் நிலைப்பாடு மாறவில்லை.” என வலியுறுத்தியுள்ளார்.
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்