வடக்கு கடல் பகுதியில் மிதந்த சடலம்-விசாரணையில் காவல்துறையினர்!
police
kilinochchi
death
investigation
poonakari
By Kalaimathy
பூநகரிப் பகுதியில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கிளிநொச்சி மாவட்டம் பூநகரி காவல்துறை பிரிவிற்குட்பட்ட கெளதாரி முனை கல்முனை கடல் பகுதியில் இன்று காலை சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்தவர்கள் பூநகரி காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை பார்வையிட்டனர். மேலதிக விசாரனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்