துர்நாற்றம் வீசும் நீதிமன்றிற்கு அருகில் உள்ள வீதி...! எழுந்துள்ள கண்டனம்
Kilinochchi
Sri Lankan Peoples
By Thulsi
கிளிநொச்சி (Kilinochchi) நீதிமன்றிற்கு அருகாமையில் உள்ள வீதியானது எந்தவித பராமரிப்பும் இல்லாமல் காணப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குறித்த விதியில் அதிகளவான கழிவுகள் மற்றும் மிருக எச்சங்கள் பிளாஸ்டிக் பொருட்கள் ஆங்காங்கே குவிக்கப்பட்ட நிலையில் உள்ளது நீதிமன்றத்திற்கு வரும் நபர்கள் குறித்த வீதியினை பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர்.
மிகப்பெரிய குப்பைமேடு
இவ்வாறு எந்தவித பராமரிப்பும் இல்லாமல் இந்த வீதி இருந்தால் குறுகிய காலத்தில் மிகப்பெரிய குப்பைமேடாக மாறிவிடும் என அச்சம் வெளியிடப்படுகிறது.
இவ் வீதியானது கரைச்சி பிரதேச சபைக்கு உட்பட்ட வீதி என தெரியவருகின்றது.
குறித்த வீதியில் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அன்றாட பயணத்தினை மேற்கொள்ளும்போது அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.
செய்தி - கஜிந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்