துறைமுக நகர சட்டமூலத்தை அவசரமாக சமர்ப்பிப்பது சீனாவின் அழுத்ததித்தினாலா? இம்ரான் மஹ்ரூப் கேள்வி

government port city imran mp
By Vanan May 16, 2021 07:22 AM GMT
Report

கொரோனா அச்சத்துக்கு மத்தியில் துறைமுக நகர சட்டமூலத்தை அவசரமாக சமர்ப்பிப்பது சீனாவின் அழுத்ததித்தினாலா என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று (16) காலை கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

நாட்டில் பல முதன்மையான பிரச்சினைகள் உள்ள நிலையில் ராஜபக்ச அரசு இந்த வாரத்தில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை அவசர அவசரமாக நாடாளுமன்றத்துக்கு கொண்டுவருவதில் பலத்த சந்தேகங்கள் உள்ளன.

கொரோனா அபாயம் இன்று நாட்டில் தலை விரித்தாடுகின்றது. அதனை ஒழிக்க இருந்த சந்தர்ப்பத்தை தனது செயற்பாட்டால் இந்த அரசு உதாசீனம் செய்தது.

இனவாத அரசியலுக்கு தீனி போட்டு சமூகத்தில் கொவிட் வளர களம் அமைத்துக்கொடுத்தது. கடைசியில் தன்னை நம்பிய 69 இலட்சம் பேரை மட்டுமன்றி முழு நாட்டையும் மரண பீதியில் வைத்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை அவசர அவசரமாக நிறைவேற்றிக்கொள்ள எத்தனிக்கிறது.

20க்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்.பிக்களுக்கு இப்தாரில் இதுபற்றி பேசப்பட்டதாக கதைகள் வருகின்றன. அவர்களது ஆதரவும் இதற்கு கிடைக்கக் கூடும். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வசதிகளை பெறவே இவ்வாறு கைதூக்கினோம் என்று நாளை அவர்கள் கூறினாலும் ஆச்சரியமில்லை.

நாட்டின் பாதுகாப்பு , சுதந்திரம் உள்ளிட்ட விடயங்களோடு தொடர்புபட்ட இந்தச் சட்டமூலம் பலத்த விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் பெற்றுள்ள நிலையில், சீனாவின் அழுத்தம் காரணமாகவா அவசர அவசரமாக நிறைவேற்றப்பட போகின்றது என்ற சந்தேகம் பரவலாக உள்ளது.

இந்த அரசாங்கத்தில் அரிசி உட்பட உணவுப்பொருட்களுக்குப் போன விலையேற்றத்தைப் பாருங்கள். இதுபோன்ற சட்ட மூலங்களை மக்களது அவல நிலைமைகளை சாதகமாக்கி சட்டமாக்குவதன் மூலம் மக்கள் முதுகில் அடிமைச் சாசனத்தை வரைந்து இந்த அரசு இலங்கையர்களை எதிர்காலத்தில் அந்நியர்களுக்கு அடிமைகளாக்க முனைகிறது.

தமது அரசியல் இருப்பையும் பிழைப்பையும் பாதுகாக்க அரச தரப்பும் அதற்கு ஆதரவளிக்கும் சுய இலாபங்களை குறித்து மட்டுமே சிந்திக்கும் கூட்டமும் எடுக்கும் இந்த முயற்சியினால் முழு நாட்டு மக்களும் பாதிக்கப்பட போகின்றார்கள்.

எனவே இந்த அசாதாரண சூழலில் இத்தகைய சட்டமூலத்தை கொண்டு வருவதை பொறுப்பு வாய்ந்த மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் கடுமையாக எதிர்க்கின்றோம்.

இந்த அடிமைச் சாசன அரசியலுக்கு பதிலாக மக்களது உயிரச்சம் நீங்க காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகின்றோம் என்றார்.

ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026