போர்ட் சிட்டி ஆணைக்குழு சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அனுமதி
colombo
city
port
By Vanan
கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்ட மூலத்தில் உச்ச நீதிமன்றம் விதந்துரைத்துள்ள திருத்தங்களை ஏற்றுக் கொள்வதற்கு அமைச்சரவை இன்று இணங்கியுள்ளது.
துறைமுக நகர ஆணைக்குழு குறித்த நாடாளுமன்ற விவாதம் நாளையும் நாளை மறுதினமும் நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது.
கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்ட மூலத்தின் சில சரத்துக்களில் ஆணைக்குழுவிற்கு எதேச்சாதிகாரம் கிடைக்கும் வகையிலான விடயங்கள் உள்ளக்கப்பட்டுள்ளதாகவும், இது அரசியல் அமைப்பிற்கு முரண்பட்டது எனவும் உச்ச நீதிமன்றம் நாடாளுமன்றிற்கு சட்ட விளக்கம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்