தேசபக்தியை நிரூபிக்க அருமையான வாய்ப்பு - ஜே.வி.பி சவால்
நாட்டின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் தேசபக்தி குறித்து பேசியவர்களின் உண்மையான தேசபக்தியை எதிர்காலத்தில் காணலாம்.நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உண்மையான தேசபக்தர்களுக்கு அவர்களின் தேசபக்தியை நிரூபிக்க அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் கொரோனா தொற்றில் கவனம் செலுத்துகின்ற இந்த நேரத்தில் துறைமுக நகர பொருளாதார சட்டமூலத்தை அவசரமாக நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிக்கிறது.நீதிமன்ற முடிவுக்கு முன்பே இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அரசாங்கம் முயற்சிக்கிறது.
எமது நாட்டில் புதிதாக சேர்க்கப்பட்ட நிலத்தின் நிர்வாகம் தொடர்பாக இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன், அதை ஒருபோதும் மாற்ற முடியாது. இது ஒரு தீவிரமான முடிவு. இந்த அரசாங்கம் ஒரு தலைகீழ் அரசாங்கம். ஜனாதிபதியின் பல வர்த்தமானிகள் இரத்து செய்யப்படுகின்றன. எனினும், வர்த்தமானி மாற்றப்பட்டாலும், போர்ட் சிட்டி சட்டத்தை மாற்ற முடியாது.
எனவே அது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்துவது மிகவும் முக்கியம். அரசாங்கம் அதையும் அனுமதிக்கப் போவதில்லை, மக்கள் வேதனையில் இருக்கும்போது அந்த சட்டமூலத்தை நிறைவேற்றப்போகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.