உயர்தர பரீட்சை காலத்தில் மின் துண்டிப்பு? கல்வியமைச்சர் வெளியிட்ட தகவல்
Dinesh Gunawardena
power cut
al exam
By Sumithiran
எதிர்வரும் 07 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை காலத்தில் மின் துண்டிப்பு இருக்கமாட்டாதென கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena)தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பகுதியில் இன்று (30) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் போது மின்துண்டிப்பு இடம்பெறாமல் இருக்க சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
கொவிட் தொற்று காரணமாக பரீட்சைகளை நடத்துவது தாமதமானதால், தற்போது அதில் மாற்றம் மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
