தடையின்றி மின்சாரத்தை வழங்க நடவடிக்கை - ஊடக சந்திப்பில் தெரிவித்த கஞ்சன
அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றிய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், ”பெப்ரவரி 2022 முதல் இலங்கை தினசரி மின்வெட்டுகளை அனுபவித்து வருகிறது, ஒரு கட்டத்தில் மின்வெட்டு 13 மணி நேரம் நீடித்தது, இது இப்போது ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரமாக குறைந்துள்ளது.
கட்டண மீள்திருத்தம்

கடந்த சில மாதங்களில் மின்வெட்டை பெருமளவு குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். எவ்வாறாயினும், மின்சாரக் கட்டணத்தை திருத்தியமைக்காமல் அதனைச் செய்ய முடியாது.
ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் மின் கட்டணத்தை மீள்திருத்தம் செய்வதே சிறந்தது.
2023 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதுவே இலங்கைக்கான சிறந்த ஆற்றல் மூலமாகும்”என தெரிவித்திருந்தார்.