நாட்டில் நடந்த பாரிய மோசடி - பதவி விலகிய அமைச்சர்: அரச தரப்பின் விளக்கம்
தரம் குறைந்த நிலக்கரி விநியோகிக்கப்பட்டமையால் ஏற்பட்டுள்ள நட்டம் அரசாங்கத்திற்கோ அல்லது மக்களுக்கோ அல்ல என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகராட்சி அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (17) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நிலக்கரி இறக்குமதி செய்த நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய சுமார் 915 கோடி ரூபா நிதியை எரிசக்தி அமைச்சு தற்போது தடுத்து வைத்துள்ளது.
கட்டணத்தில் சேர்க்கப்பட மாட்டாது
தரம் குறைந்த நிலக்கரி காரணமாக சுமார் 8,000 மில்லியன் ரூபா (800 கோடி) நட்டம் ஏற்படலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், அரசாங்கம் அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான 915 கோடி ரூபாவை தன்வசம் வைத்துள்ளது.

இந்த நட்டம் எக்காரணம் கொண்டும் மின்சாரக் கட்டணத்தில் சேர்க்கப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
குறித்த நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, 15 மில்லியன் டொலர் (சுமார் 450 கோடி ரூபா) பெறுமதியான செயல்திறன் பிணைமுறி அரசாங்கத்திடம் உள்ளது.
அத்துடன், 3 கப்பல்களுக்கான கொடுப்பனவுகளில் சுமார் 500 கோடி ரூபா இதுவரை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |