வெளிநாடொன்றில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Philippines
Earthquake
World
By Thulsi
பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் இன்று (07.01.2026) ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
6.7 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
[8C7ZJ6B ]
சேதங்கள் அல்லது உயிர் இழப்புகள்
பிலிப்பைன்ஸின் பக்குலின் நகருக்குக் கிழக்கே 68 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடல் பகுதியில் இன்று பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்ததால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
எவ்வாறாயினும், இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது உயிர் இழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
6ம் ஆண்டு நினைவஞ்சலி