அழகியல் செய்முறை பரீட்சார்த்திகளுக்கு வெளியான விசேட அறிவித்தல்
Ministry of Education
Department of Examinations Sri Lanka
G.C.E. (O/L) Examination
By Jaso
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாளை (27) ஒரு நாள் மட்டும் நாட்டின் அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை நாளாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எனினும் 2026 க.பொ.த (சாதாரண தர) பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சை, ஏற்கனவே திட்டமிட்டபடி உரிய பரீட்சை நிலையங்களில் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை
இது தொடர்பாக ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், பரீட்சார்த்திகள் உரிய வலய கல்விப் பணிப்பாளரிடம் தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்கு:
உடனடி அழைப்பு இலக்கம் (Hotline): 1911
தொலைபேசி இலக்கங்கள்: 0112784208, 0112784537
தொலைநகல் (Fax): 0112784422
[
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |