வெளிநாடு செல்ல அனுமதி கோரி பிரசன்ன ரணதுங்க மனு
அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைய, அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு இன்று (27) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட காரணத்திற்காக வெளிநாடு செல்ல வேண்டியுள்ளதால், பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்து கோரிக்கை விடுத்துள்ளார்.
மனு மீதான விசாரணை
இது தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் எதிர்ப்புகள் உள்ளனவா என்பதை ஆராய்வதற்காக, குறித்த மனுவை எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |