முன்னாள் அமைச்சர் பிரசன்னவின் வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கம்
Colombo
Sri Lanka Magistrate Court
Prasanna Ranatunga
By Jaso
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மீது விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (14) முடிவு செய்தது.
முன்னாள் அமைச்சர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா விடுத்த கோரிக்கையைப் பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சட்டத்தரணி விடுத்த கோரிக்கையும் நீதிமன்றின் அனுமதியும்
சந்தேக நபர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் தனிப்பட்ட காரணங்களுக்காக வெளிநாடு செல்ல வேண்டியிருப்பதால் அவர் மீதான வெளிநாட்டுப் பயணத் தடையை இன்றிலிருந்து ஓகஸ்ட் 02 வரை தற்காலிகமாக நீக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து அவர் மீதான பயணத்தடையை நீதிமன்றம் தற்காலிகமாக நீக்கியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்