சிறுவர்களுக்கு கிடைத்த ஒரு தொகை தோட்டாக்கள்..! வெளியாகிய பின்னணி
Sri Lanka
Sri Lanka Police Investigation
By pavan
கந்தளாய் அக்போபுர காவல்துறை பிரிவுக்குட்பட்ட சீனி புர பகுதியில் ஆயுதங்களுக்கு பயன்படுத்தும் தோட்டாக்களை நேற்று (02) மாலை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
சீனிபுர பகுதியில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த வேளையில் சந்தேகத்துக்குரிய குழாய் ஒன்றில் தோட்டாக்கள் இருந்துள்ளது.
அதனை சிறுவர்கள் பெற்றோருக்கு தெரியப்படுத்திய பின் அக்போபுர காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரணை

அக்போபுர குற்றத்தடுப்பு காவல்துறையினர் அனைத்தையும் மீட்டு இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்டெடுக்கப்பட்ட பொருட்கள்
T56 தோட்டாக்கள் 152
துப்பாக்கி 04 தோட்டாக்கள்
84s 04 தோட்டாக்கள்
9 MM துப்பாக்கியின் தோட்டாக்கள் 20
சைலன்சர் 01
எஸ் எல் ஆர் (SLR) துப்பாக்கி தோட்டாக்கள் 03
3ம் ஆண்டு நினைவஞ்சலி