ஜனாதிபதி அநுர பிரான்ஸ் விஜயம்! வெளியாகியுள்ள அறிவிப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வரும் ஜூலை 16 ஆம் திகதி பிரான்சுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் இலங்கைக்கு பிரெஞ்சு முதலீடுகளை ஈர்ப்பது ஆகிய விடயங்கள் குறித்து முக்கியமாக கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த விஜயத்தின் முக்கிய அம்சமாக, உலகின் மிகப்பெரிய கடல்வழிப் போக்குவரத்து மற்றும் தளவாட நிறுவனங்களில் ஒன்றான CMA CGM இன் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரொடால்ப் சாடேவுக்கும் (Rodolphe Saadé) ஜனாதிபதி அநுரவுக்கும் இடையிலான சந்திப்பு அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலீட்டு வாய்ப்புகள்
இலங்கையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளில் பிரெஞ்சு வணிக நிறுவனங்களிடையே ஆர்வம் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட, இலங்கைக்கான பிரெஞ்சு தூதுவர் ரெமி லம்பேர்ட் இந்த சந்திப்பை உறுதிப்படுத்தியுள்ளார்.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக மற்றும் தூதுவர் லம்பேர்ட் தலைமையிலான பிரெஞ்சு முதலீட்டாளர்கள் குழுவிற்கும் இடையே நடைபெற்ற சந்திப்பின் போதே இவ்விஜயம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 மணி நேரம் முன்