ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு நன்றி கூறிய நாமல் ராஜபக்ஸ
Sri Lanka
People
Namal Rajapaksa
By Vasanth
இலங்கையர்களை மீண்டும் தாய் நாட்டிற்கு அழைத்து வருவதற்காக விமான சேவைகளின் எண்ணிக்கை எதிர்வரும் வாரம் முதல் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ, தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு இதை தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டிற்கு அழைத்து வரப்படும் அனைத்து இலங்கையர்களையும், அரசாங்கத்தினால் நடத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
அழைத்து வரப்படும் அனைவரும் ஹோட்டல்களில் தங்க வைக்கப்படுவது கட்டாயமானது அல்ல. மேலும் நான் ஜனாதிபதிக்கு நன்றி கூறுகிறேன் என நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி