தமிழ் பொது வேட்பாளருடன் பேச்சு வார்த்தைக்கு முனையும் ரணில் தரப்பு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கியிருக்கும் பா. அரியநேத்திரனுடன் (P. Ariyanethiran) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தரப்பு பேச்சுவார்த்தை ஒன்றை மேற்கொள்ள முனைவதாக தெரியவந்துள்ளது.
எனினும், அவ்வாறான பேச்சு வார்த்தைக்கு செல்லாது எனவும், அது தொடர்பிலான ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிடவுள்ளதாகவும் தமிழ் பொது வேட்பாளர் தரப்பிலிருந்து கூறப்பட்டு வருகின்றது.
அதேநேரம், இன்று (11) நடைபெறவுள்ள தமிழரசுக் கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்கும் என்பதன் நிலைப்பாடு தொடர்பில் அதிகளவான விவாதங்கள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது.
சுமந்திரனின் அணி
எனினும், தமிழரசுக் கட்சியை சேர்ந்த சிலர், கட்சியானது ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறான முடிவை எடுக்க வேண்டும் என்பது தொடர்பில் தீர்க்கமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
அந்தவகையில், சுமந்திரனின் அணியை சேர்ந்தவர்கள் பிரதான வேட்பாளரிடம் பேரம் பேசி ஒரு நிலைப்பாட்டை எட்ட வேண்டுமெனவும், சிறீதரன் உள்ளிட்டோர் தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்தியும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தமிழரசுக் கட்சியின் இன்றைய மத்தியக்குழு கூட்டம் தொடர்பாகவும் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் ஆராய்கிறது கீழ்வரும் காணொளி....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |