பதவி விலகுமாறு பாதுகாப்பு அமைச்சருக்கு அழுத்தம்: யுக்திய நடவடிக்கைகளின் எதிரொலி
Tiran Alles
Sri Lanka
Sri Lankan Peoples
By Dilakshan
தனது அமைச்சுப் பதவி விட்டு விலகுமாறு சிலர் தமக்கு அழுத்தம் கொடுப்பதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்(Tiran Alles) தெரிவித்துள்ளார்.
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இடம்பெற்ற போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்வு வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
போதைப்பொருள் வலையமைப்புகளை ஒடுக்குவதற்காக மேற்கொள்ளப்படும் யுக்திய நடவடிக்கைகளினால் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புள்ளவர்கள் இவ்வாறான அழுத்தங்களை பிரயோகிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
சீர்குலைக்க திட்டம்
ஆனால் எத்தனை தடைகள் வந்தாலும் இந்த நாட்டை பாதாள உலகத்தில் இருந்து காப்பாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனை விரும்பாதவர்கள் இந்த திட்டத்தை சீர்குலைக்க முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்