வாகனம் வாங்க காத்திருப்போருக்கான அறிவிப்பு!
srilanka
price
vehicles
By Sumithiran
அரசாங்கம் வாகன இறக்குமதி நடவடிக்கையினை ஆரம்பித்தாலும் , வாகனங்களின் விலை குறைவடையும் சாத்தியம் இல்லையென இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக வாகன விநியோகஸ்தர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் பணவீக்கம் ஆகியன காரணமாக வாகனங்களின் விலை கடுமையாக உயர்வடைந்துள்ளதாகவும் இந்த நிலைமையினை சரிசெய்வதற்கு நீண்டகாலம் தேவைப்படுமெனவும் சம்பத் மெரஜ்சிகே தெரிவித்துள்ளார்.
எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி நடவடிக்கைக்கு டொலர் இல்லாத நிலையில், வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது எனவும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரஜ்சிகேட் தெரிவித்துள்ளார்.
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 19 மணி நேரம் முன்
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்