சட்டத்தை மீறி சர்ச்சையில் சிக்கிய பிரதமர் ஹரிணி.!
பிரதமர் ஹரிணி அமரசூரிய தேர்தல் சட்டங்களை மீறியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை விசாரிக்குமாறு PAFFREL தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த கோரிக்கையானது, தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமரின் கருத்து
இதன்படி, ஆணைக்குழுவின் தவிசாளர் ஆணை ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவுக்கு PAFFREL அமைப்பு எழுதியுள்ள கடித்தில், “பிரதமர் ஹரிணி அமரசூரிய மே 03 ஆம் திகதி முதல் அமைதியான காலத்துக்குப் பிறகும் தனது ஆதரவாளர்களை பிரச்சாரத்தில் ஈடுபட ஊக்குவிப்பதாகக் கருதக்கூடிய ஒரு கருத்தை வெளியிட்டிருப்பதை நாங்கள் கண்காணித்துள்ளோம்.
பிரதமரின் கருத்து, அவரது ஆதரவாளர்கள் தேர்தல் சட்டத்தை மீற ஊக்குவிக்கும் செயலாகும், அதே நேரத்தில் அவர் சட்டத்தை புறக்கணித்துள்ளார்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியும் (SJB)முறைப்பாடு அளித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று (05) தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் எழுத்துப்பூர்வ முறைப்பாட்டை ஒப்படைத்து பிரதமருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரச்சார காலம் 2025 மே 3 ஆம் திகதி (சனிக்கிழமை) நள்ளிரவுடன் முடிவடைந்தது. சட்டத்தின்படி இந்தக் காலகட்டத்தில் எந்தவொரு கட்சியும் சட்டப்பூர்வமாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
