சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் இரங்கல்
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
தற்போது நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக எமது நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதேவேளை, அந்த நடவடிக்கைக்கு உங்களது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றோம் என கூறினார் .
இந்நிலையில் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் ஆழந்த அனுதாபங்களை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
சீரற்ற காலநிலை குறித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவது தொடர்பிலும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்சவால்(Chamal Rajapaksa) சபையில் அறிக்கையொன்று முன்வைக்கப்படவுள்ளது என்பதையும் குறிப்பிட வேண்டும் என பிரதமர் தெரிவித்தார்.

