ஹெரோயினுடன் கைதான அதிபர் பணி நீக்கம் : பல கோணங்களில் விசாரணைகள் தீவிரம்!
ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட அதிபர் சேவையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைக் கவனத்தில் கொண்டு, ஸ்தாபனக் கோவையின் சரத்துக்களின் கீழ் வரும் குற்றத்தில் அவர் ஈடுபட்டுள்ளதால் , உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் நகர சபை உறுப்பினரின் கணவரான குறித்த அதிபர், அண்மையில் 1 கிலோ 118 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் விநியோகம்
அநுராதபுரம்- எப்பாவல பகுதியில் போதைப்பொருள் கடத்தலை, பேலியகொட நகரசபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினரின் மகனும், தெற்கு பாதாள உலகக் கும்பல் தலைவருமான கொஸ்கொட சுஜியின் உறவினருமான மகன் மேற்கொண்டுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக களனியில் உள்ள நகரசபை உறுப்பினரின் வீட்டை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளதுடன் இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக எதிர்வரும் சில நாட்களில் அவரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த போதைப்பொருள் கடத்தலை மேற்கொண்ட நகரசபை உறுப்பினரின் மகன் தற்போது போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் உள்ளார். சந்தேகநபரான அதிபரின் மூத்த சகோதரரின் மகன் இந்த ஹெராயின் போதைப்பொருளை துபாயிலிருந்து அனுப்பியதாகவும் தெரியவந்துள்ளது.
நகரசபை உறுப்பினரின் மகன் பல சந்தர்ப்பங்களில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் அதிபரும் அறிந்திருந்தமை தற்போது தெரியவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |