சம்பள முரண்பாட்டிற்கு நிரந்தர தீர்வு கோரி அதிபர், ஆசிரியர்கள் விரைவில் பாரிய போராட்டம்

Colombo Sri Lanka
By Kathirpriya Oct 07, 2023 12:15 PM GMT
Report

அதிபர் ஆசிரியர்களின் சம்பள நிலுவைகளை கோரி ஒக்டோபர் 24ஆம் திகதி கொழும்பு மத்திய கல்வி அமைச்சுக்கு முன்பாக பாரிய போராட்டம் இடம்பெறவுள்ளது.

இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளும் படி அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் ஜெயராயசிங்கம் கோல்வின் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்றைய தினம் (07) யாழ்ப்பாணத்தில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

"வழங்கிய வாக்குறுதி எல்லாம் பொய்யுறுதி" பண்ணையாளர்கள் சிதர் தேங்காய் அடித்து போராட்டம்! (படங்கள்)

"வழங்கிய வாக்குறுதி எல்லாம் பொய்யுறுதி" பண்ணையாளர்கள் சிதர் தேங்காய் அடித்து போராட்டம்! (படங்கள்)

நிர்வாகப் பிரச்சனைகள்

'இலங்கையில் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பள நிலுவை பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படாமல் இருப்பதால் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் ஆசிரியர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கெடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த சம்பள நிலுவை தொடர்பில் அரசாங்கத்துடன் பல்வேறு சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தையினை நடத்திய போதும் இதுவரை முறையான தீர்வுகள் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த வருடம் (2022) ஆசிரியர்களின் சம்பள நிலுவையை கோரி கொழும்பில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது அதில் சில கோரிக்கைகளை மட்டுமே அரசாங்கம் நிறைவேற்றியது.

நீதிக்கான மாபெரும் கண்டன பேரணிக்கு ஒன்று கூடுமாறு முல்லைத்தீவு இளைஞர்கள் அறைகூவல்!

நீதிக்கான மாபெரும் கண்டன பேரணிக்கு ஒன்று கூடுமாறு முல்லைத்தீவு இளைஞர்கள் அறைகூவல்!

சம்பள முரண்பாட்டிற்கு நிரந்தர தீர்வு கோரி அதிபர், ஆசிரியர்கள் விரைவில் பாரிய போராட்டம் | Principal Teachers Protest In Colombo For Salary

ஆனால், அதிபர் ஆசிரியர்களின் ஏனைய நிலுவைகள் மற்றும் நிர்வாகப் பிரச்சனைகள் இன்னமும் தீர்க்கப்படாமலே உள்ளது, எனவே அவற்றை தீர்க்க வேண்டும் என்று முகமாக அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக தற்போது போராட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.

பல ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களில் கடமையாற்றி வரும் நிலையில் அவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவையை அரசாங்கம் வழங்க வேண்டும்.

ஆகவே, அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு நிரந்தர தீர்வை காணும் முகமாக ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி அனைத்து அதிபர்களும் ஆசிரியர்களும் இணைந்து கொழும்பில் மேற்கொள்ளவுள்ள உரிமைப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்' என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் ஜெயராயசிங்கம் கோல்வின் தெரிவித்துள்ளார். 

கொட்டும் மழையிலும் தீப்பந்தம் ஏற்றி போராடும் மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்கள்!(படங்கள்)

கொட்டும் மழையிலும் தீப்பந்தம் ஏற்றி போராடும் மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்கள்!(படங்கள்)

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026