நாட்டில் வெடித்த தொடர் சிறை மோதல்கள்! முப்படையினருக்கு அவசர அறிவித்தல்
அனைத்து சிறைச்சாலைகளின் பாதுகாப்பையும் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
முப்படையினர் மற்றும் காவல்துறையினருக்கு இது தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டில் இடம்பெறும் தொடர் சிறைக்கலவரங்களை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகளில் மோதல் நிலை
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டில், மெகசின், குருவிட்ட, பல்லன்சேன உள்ளிட்ட சிறைச்சாலைகளில் மோதல் நிலை ஏற்பட்டதோடு சிலர் உயிரிழந்துதுள்ளடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தநிலையில், குறித்த சிறைச்சாலைகளில் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புத் தரப்பினர் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் நீர்கொழும்பு, மஹர உள்ளிட்ட சிறைச்சாலைகளையும் சேர்த்து மொத்தம் 5 சிறைச்சாலைகளில் இது போன்ற கலவரங்கள் ஏற்பட்டு பாரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
மேலும், சிறைச்சாலைகளில் திட்டமிட்டு கலவரங்களை ஏற்படுத்த ஒரு தரப்பு தயாராகி வருவதாக உளவுத் தகவல்கள் கிடைத்துள்ளன என்று நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார அண்மையில் அறிவித்திருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |