கந்தகாடு புனர்வாழ்வு முகாமிலிருந்து தப்பியோடிய நூற்றுக்கணக்கான கைதிகள் கைது
பொலநறுவை வெலிகந்த கந்தகாடு பகுதியில் அமைந்துள்ள புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற 138 கைதிகளில் 129 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏனைய 09 கைதிகளை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
போதைக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்வளிக்கப்படும்
நீதிமன்ற உத்தரவுக்கமைய போதைக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்வளிக்கப்படும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்றையதினம் இரண்டு தடவைகள் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 138 கைதிகள் தப்பிச் சென்றிருந்தனர்.
இதையடுத்து அவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டனர். பொலனறுவை - சோமாவதிய வீதியில் சுங்கவில வனப் பிரதேசத்தில் இந்த தேடுதல் பணி முன்னெடுக்கப்பட்டது.
நாடளாவிய ரீதியில் தடைப்பட்ட மின்சாரம் : இலங்கை மின்சார சபை பொறுப்பேற்க வேண்டுமென தயாசிறி வலியுறுத்து!
கைதிகள் கைது
இதன்போது, தப்பியோடிய கைதிகளில் 102 பேர் நேற்றிரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில், இன்று காலை மற்றும் பிற்பகல் பாதுகாப்பு படையினரால் மேலும் 27 கைதிகள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 78 பேர் இன்று பொலனறுவை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், அவர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஹிங்குரக்கொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட 25 கைதிகள் நாளை (13) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |