கிறிஸ்துமஸ் தினத்தன்று விடுவிக்கப்படாத சிறைக்கைதிகள்!
எதிர்வரும் நாட்களில் கிறிஸ்துமஸ் தினத்திற்கான கைதிகளை விடுவிக்க எதிர்ப்பார்ப்பதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்மஸ் தினத்தன்று சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் நிலையில், இம்முறை கிறிஸ்துமஸ் தினத்திற்கு எந்த கைதிகளும் விடுவிக்கப்படவில்லை.
கிறிஸ்துமஸ் தினத்திற்கு விடுவிக்கப்பட வேண்டிய கைதிகளின் பட்டியல் சம்பந்தப்பட்ட அமைச்சகத்திற்கு வழங்கப்பட்டதாகவும் சிறைச்சாலைகள் திணைக்கள செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அறிக்கை கோரல்
தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எனினும், கைதிகள் தொடர்பாக மேலும் பல அறிக்கைகள் கோரப்பட்டுள்ளதாகவும் மேலும் அவற்றை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, எதிர்காலத்தில் கிறிஸ்துமஸ் தினத்திற்கு சிறைச்சாலை கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |