ஞானசாரதேரருக்கு களையப்பட்டது காவி ஆடை : வழங்கப்பட்டது கைதிகளுக்கான சீருடை
Department of Prisons Sri Lanka
Galagoda Aththe Gnanasara Thero
Prisons in Sri Lanka
By Jaso
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, காவி ஆடை களையப்பட்டு கைதிகளுக்குரிய சீருடை இன்று (05) பிற்பகல் வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.
தற்போது அவர் சிறைச்சாலை சீருடையில் இருப்பதாக அவர் கூறினார்.
நீதிமன்றின் உத்தரவு
மேலும், அவர் சாதாரண கைதிகள் தங்கியிருக்கும் சிறை அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலப்பகுதியை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (5) உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்