சிறைச்சாலையில் அடைக்கப்படும் கைதிகளின் சீருடைகள்: வெளியான அறிவிப்பு

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation
By Shalini Balachandran Oct 06, 2026 05:10 PM GMT
Report

சிறைச்சாலை விதிமுறைகளின்படி மூன்று ஆண்டுகளுக்கும் அதிகமான சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எந்தவொரு நபரும் சிறைச்சாலையினால் வழங்கப்படும் சிறை ஆடையை அணிந்தே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பள்ளேதன்ன இதனை தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையில் அடைக்கப்படும் கைதிகளின் சீருடைகள் தொடர்பாகச் சமூக ஊடகங்களில் பரவிவரும் பல்வேறு கருத்துக்களுக்குத் தெளிவுபடுத்தல் வழங்கி அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால் "தீர்க்கமான பதிலடி" : அமெரிக்கா,இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால் "தீர்க்கமான பதிலடி" : அமெரிக்கா,இஸ்ரேலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

சாதாரண சிறைத்தண்டனை

குறித்த அறிக்கையிலேயே அவர் மேற்படி விடயத்தை தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையில் அடைக்கப்படும் கைதிகளின் சீருடைகள்: வெளியான அறிவிப்பு | Prisons Dept Clarifies Convict Dress Code Rules

இது தொடர்பில்  மேலும் தெரிவித்த அவர், பௌத்த பிக்கு ஒருவருக்கு நீதிமன்றத்தினால் சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தால் அந்த் தண்டனைக் காலத்தைச் சிறைச்சாலையில் கழிக்கும் போது அவர் தமது காவி ஆடையை அணிய முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், விதிக்கப்பட்டது கடுழியச் சிறைத்தண்டனை என்றால் எந்தவொரு நபரும் சிறை ஆடையையே அணிய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

குருக்கள்மடத்தில் மண் படிமப் பரிசோதனைகள் முன்னெடுப்பு..!

குருக்கள்மடத்தில் மண் படிமப் பரிசோதனைகள் முன்னெடுப்பு..!

சிறைத்தண்டனைக் காலம்

தண்டனை பெற்ற ஒருவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் போது அவரது சிறைத்தண்டனைக் காலம் 3 ஆண்டுகளை விடக் குறைவானதாக இருந்தால் அவர் தண்டனைக்கு முன்னர் அணிந்திருந்த சாதாரண ஆடையை அணிவதற்குச் சிறைச்சாலை அத்தியட்சகர் அனுமதி வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறைச்சாலையில் அடைக்கப்படும் கைதிகளின் சீருடைகள்: வெளியான அறிவிப்பு | Prisons Dept Clarifies Convict Dress Code Rules

அத்தகைய சந்தர்ப்பங்களில் பௌத்த பிக்குகளுக்கும் காவி ஆடை அணிய அனுமதி வழங்கப்படலாம் ஆனால் 3 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எந்தவொரு தராதரத்தைக் கொண்ட நபராக இருப்பினும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படும் போது சிறைச்சாலையினால் வழங்கப்படும் ஆடையை அணிந்தே முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நாட்டின் சிறைச்சாலைகளில் 63 இற்கும் மேற்பட்ட தேரர்கள் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதாகவும் அவர்கள் அனைவரும் சிறைச்சாலையினுள் சிறை ஆடையையே அணிந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

பசிலுக்கு இறுகும் பிடி : நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிரடி நடவடிக்கை

பசிலுக்கு இறுகும் பிடி : நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிரடி நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025