இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்
இன்றைய (07.08.2026) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.
காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.30 வரை நடைபெறவுள்ளது.
அதன்படி, காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 மணி முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 11.30 முதல் மாலை 5.00 வரை பின்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகள் பிரேரிக்கப்படவுள்ளன.
(i) பால் உற்பத்தியில் தன்னிறைவினை ஊக்குவித்தல் (கந்தசாமி பிரபு)
(ii) கண்டல் தாவர சூழல்தொகுதியை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல் (ஹெக்டர் அப்புஹாமி)
(iii) மட்டக்களப்பிலிருந்து பொத்துவில் வரை தொடருந்துப் பாதையை விஸ்தரித்தல் அல்லது மாத்தறையிலிருந்து கல்முனை வரை தொடருந்துப் பாதையை விஸ்தரித்தல் (எம்.எஸ். உதுமாலெப்பை)
(iv) கொரோனா பெருந்தொற்று நிலவிய காலப்பகுதியில், ஒருதலைப்பட்சமாகவும் வலுக்கட்டாயமாகவும் முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்களை தகனம் செய்தமை தொடர்பாக விசாரிப்பதற்கு ஆணைக்குழுவொன்றை நியமித்தல் (இம்ரான் மகரூப்)
(v) இரசாயனத் திரவியங்களைப் பயன்படுத்தி பழங்களைப் பழுக்க வைப்பதைத் தடுப்பதற்கான வழிமுறையொன்றைத் தயாரித்தல் (தயாசிறி ஜயசேகர)
(vi) இலங்கையில் வன விலங்குகளை முகாமைத்துவம் செய்வதற்கு தேசியக் கொள்கையொன்றையும் செயன்முறையொன்றையும் வகுத்தல் (சுசந்த குமார நவரத்ன)
(vii) அபிவிருத்தியில் நிலவும் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கு தனியானதொரு விசேட அபிவிருத்தி நிதியத்தைத் தாபித்தல் (சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்.
மாலை 5.00 முதல் 5.30 வரை ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |