பாரிய அளவில் இலாபம் ஈட்டும் தனியார் கல்வி நிலையங்கள் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை
University of Peradeniya
Sri Lanka
Sri Lankan Schools
By Aadhithya
இலங்கையில் (Sri Lanka) தனியார் கல்வி நிலையங்கள் மூலமான வருடாந்த வருமானம் சுமார் 200 பில்லியன் ரூபா என பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளியல் விஞ்ஞான மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவு பேராசிரியர் வசந்த அதுகோரள தெரிவித்துள்ளார்.
எனவே, தனியார் வகுப்புக்கள் தொடர்பில் உடன் ஒழுங்குபடுத்தல்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் வகுப்புகள்
இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர், “நாட்டின் ஒட்டுமொத்த பாடசாலைக் கட்டமைப்பினையும் பின்தள்ளி தனியார் கல்வி நிலைய கலாசாரம் தலைதூக்கியுள்ளது. தனியார் கல்வி நிலையங்களில் தகுதியற்றவர்களும் வகுப்பு நடாத்துகின்றனர்.
இது ஒர் பாரதூரமான நிலைமை, தனியார் கல்வி நிலையங்கள் ஒழுங்குபடுத்தப்படாவிட்டால் அது மாணவர்களை மோசமாக பாதிக்கும்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
2ம் ஆண்டு நினைவஞ்சலி