எரிபொருள் இல்லை என்றால் புகையிரத சேவையிலும் சிக்கல்
புகையிரத திணைக்களத்திடம் சுமார் 5 இலட்சம் முதல் 6 இலட்சம் லீற்றர் வரையான எரிபொருள் இருப்பு உள்ள போதிலும், அது தற்போது மூன்றரை இலட்சம் லீற்றர் ஆக குறைந்துள்ளதாக புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் புகையிரத திணைக்களத்துக்கு நாளாந்தம் தேவையான எரிபொருளை வழங்காவிடின் புகையிரத சேவையில் சிக்கல்கள் ஏற்படலாம் என புகையிரத தொழிற்சங்க கூட்டணியின் இணை ஒருங்கிணைப்பாளர் பி.விதானகே (P. Vithanage) தெரிவித்துள்ளார்.
மருதானை ரயில் ஊழியர் சங்க காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
புகையிரதசேவை முறையாக இயங்கினால் நாளொன்றுக்கு 100,000 லிட்டர் எரிபொருளை செலவழிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியினால் கொழும்பு துறைமுகத்தில் உள்ள இரண்டு எரிபொருள் தாங்கிகளுக்கு 93 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.