யாழ். பல்கலையில் சிரேஷ்ட விரிவுரையாளர்களுக்கு பதவி உயர்வு - பேரவை ஒப்புதல்

Ministry of Education Jaffna University of Jaffna Education
By Thulsi Sep 28, 2025 04:40 AM GMT
Report

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் (University of Jaffna) பேராசிரியர் ஒருவரைச் சிரேஷ்ட பேராசிரியராகவும், சிரேஷ்ட விரிவுரையாளர்கள் ஆறு பேரைப் பேராசிரியர்களாகவும் பதவி உயர்த்துவதற்குப் பல்கலைக்கழக பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

விவசாய பீடத்தின் விவசாய உயிரியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவரை சிரேஷ்ட பேராசிரியராகவும், மருத்துவ பீடத்தின் சத்திர சிகிச்சையியல் துறை மற்றும் உடற்கூற்றியல் துறை ஆகிய துறைகளை சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூன்று பேரையும், கலைப்பீடத்தின் புவியியல் துறை, இந்து கற்கைகள் பீடத்தின் சமஸ்கிருத துறை மற்றும் இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தின் விளையாட்டு விஞ்ஞான அலகைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரையும் பேராசிரியர்களாக பதவி உயர்த்துவதற்கே பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 

பல்கலைக்கழக பேரவையின் மாதாந்தக் கூட்டம் செப்டம்பர் 27 ஆம் திகதி சனிக்கிழமை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. 

கூண்டோடு நடக்கும் கைதுகளால் பலருக்கு உதறல் - நகையாடும் NPP அமைச்சர்

கூண்டோடு நடக்கும் கைதுகளால் பலருக்கு உதறல் - நகையாடும் NPP அமைச்சர்

பதவி உயர்த்தப்பட்டுள்ளார்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுற்றறிக்கை நியமங்களுக்கு அமையத் திறமை அடிப்படையில் சிரேஷ்ட பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த விவசாய உயிரியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர்  ஜி. திருக்குமரன், பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த சத்திர சிகிச்சையியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான சிறுநீரக சத்திர சிகிச்சை நிபுணர் பாலசிங்கம் பாலகோபி, சிரேஷ்ட விரிவுரையாளரும், சத்திர சிகிச்சை நிபுணருமான சுந்தரமூர்த்தி ஐயர் துரைசாமி சர்மா, உடற்கூற்றியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி துரைரட்ணம் செந்தூரன்.

யாழ். பல்கலையில் சிரேஷ்ட விரிவுரையாளர்களுக்கு பதவி உயர்வு - பேரவை ஒப்புதல் | Promotion To Post Of Professor Jaffna University

மற்றும், புவியியல் துறை தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா, சமஸ்கிருதத்துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி மகேஸ்வரக்குருக்கள் பாலகைலாசநாத சர்மா மற்றும் விளையாட்டு விஞ்ஞான அலகின் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி சிவநேசன் சபா ஆனந்த் ஆகியோரின் விண்ணப்ப மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. 

அவற்றின் அடிப்படையில், விவசாய பீடத்தைச் சேர்ந்த பேராசிரியர்  ஜி. திருக்குமரன் விவசாய உயிரியலில் சிரேஷ்ட பேராசிரியராகவும், மருத்துவ பீடத்தைச் சேர்நத சிறுநீரக சத்திர சிகிச்சை நிபுணர் பாலசிங்கம் பாலகோபி சிறுநீரகவியல் பேராசிரியராகவும், சத்திர சிகிச்சை நிபுணர் சுந்தரமூர்த்தி ஐயர் துரைசாமி சர்மா சத்திர சிகிச்சையியலில் பேராசிரியராகவும், உடற்கூற்றியல் துறைத் தலைவர் கலாநிதி துரைரட்ணம் செந்தூரன் உடற்கூற்றியல் பேராசிரியராகவும், புவியியல் துறை தலைவர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா புவியியல் பேராசிரியராகவும், சமஸ்கிருத துறைத் தலைவர் கலாநிதி மகேஸ்வரக்குருக்கள் பாலகைலாசநாதசர்மா சமஸ்கிருதத்தில் பேராசிரியராகவும், விளையாட்டு விஞ்ஞான அலகின் தலைவர் கலாநிதி சிவநேசன் சபா ஆனந்த் உடற்கல்வியியல் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.   

யாழ்.பருத்தித்துறை நகர சபையின் அலட்சிய போக்கால் ஏற்பட்ட அசம்பாவிதம்

யாழ்.பருத்தித்துறை நகர சபையின் அலட்சிய போக்கால் ஏற்பட்ட அசம்பாவிதம்

கதறும் தமிழக உறவுகள்: தவெக தலைவர் விஜயின் உருக்கமான பதிவு

கதறும் தமிழக உறவுகள்: தவெக தலைவர் விஜயின் உருக்கமான பதிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

கரணவாய், கொழும்பு, London, United Kingdom

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
நன்றி நவிலல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், விசுவமடு

16 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025