தீவிரவாத பாணியில் ராஜபக்சர்கள் நகர்வு
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அரசாங்கத்துடன் தொடர்புடைய தீவிரவாதக் கும்பலால் மேற்கொண்ட வன்முறை தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகவும், இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்துக்கு முன் நிறுத்தப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலுடன் அரச தலைவரும் பிரதமரும் தொடர்புபட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
“ஒரு மாத காலத்திற்கு மேலாக அகிம்சை வழியில் மிக கண்ணியமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களினால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சட்டத்தை மீறும் வகையில் அல்லது பண்பாடற்ற முறையில் எந்தவிதமான நடவடிக்கைகளும் பதியப்படவில்லை. அவர்கள் வன்முறைக்கு பதிலாக அகிம்சையே கை கொண்டார்கள்.
அவ்வாறான அகிம்சைவாத போராளிகள் மீது அரசானது எல்லா சந்தர்ப்பங்களிலும் தமது தீவிரவாத பாணியிலான அடக்குமுறையையும், அச்சுறுத்தல்களையுமே மேற்கொண்டு வந்தது.
தன்னுடைய ஆதரவாளர்கள் மற்றும் அதிகார பலத்தால் வெறி கொண்டுள்ள கூட்டம் நாட்டை ஆட்சி செய்கிறது.
அழுக்குப்படிந்து துர்நாற்றம் வீசக்கூடிய அரசை நாம் எச்சரிக்கின்றோம். இந்த மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு அரச தலைவர் மற்றும் பிரதமர் உள்ளடங்களாக ராஜபக்சர்கள் அனைவரும் தொடர்புபட்டுள்ளனர். இந்த தீவிரவாத பாணியிலான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்” என்றார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
