தமிழர் தரப்புக்கு கிடைத்த பெரு வெற்றி
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த மண்ணிலே தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமை ஒன்று உள்ளது என்பதை சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே தங்களுடைய எதிர்பார்ப்பு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளை காட்டிலும், இலங்கை அதிகளவு இராணுவப் படைகளை கொண்டிருப்பதே நாடு தற்போது எதிர்நோக்கி உள்ள பாரிய பொருளாதார சிக்கலுக்கு காரணம் என கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
''எமது நாடு அலங்கோலமான மிகவும் மோசமான நிலையை எட்டியிருக்கின்றது. வன்முறை உச்சத்தைத் தொட்டிருக்கின்றது. ராஜபக்சக்களின் குண்டர்கள் நியாயமான போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் இடங்களிற்குள் புகுந்து அவர்களைத் தாக்கியிருக்கின்றார்கள்.
அதனால் கோபம் கொண்ட எமது மக்கள் மாவட்டங்கள் தோறும் வன்முறைகளைக் கையில் எடுத்திருக்கின்றார்கள். சட்டம் ஒழுங்கு நிலைகுலைந்திருக்கின்றது. இந்த நாடு மிக மோசமான நிலைக்குள் தள்ளிச்சென்றுள்ள நிலையில், வடக்கு, கிழக்கு மாத்திரமல்ல மலையகம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள மக்களிடம் நான் ஒரு அன்பான வேண்டுகோளை விடுக்கின்றேன்.
நாங்கள் இந்த இடைக்காலத்தில் நிதானமாகவும், பொறுமையாகவும் எங்களது நிலைகளைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக காலி முகத்திடலில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை தமிழ் இளைஞர்கள் கடைப்பிடித்த அமைதியும் நிதானமும் எங்களுக்கு ஒரு பெரு வெற்றியைத் தந்திருக்கின்றது'' என்றார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
