மின்தடையயைக் கண்டித்து நள்ளிரவில் தலைநகரில் போராட்டம்! (படங்கள்)
எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட எரிசக்தி நெருக்கடிகளுக்கு உடனடி தீர்வைக் கோரி ஐக்கிய மக்கள் சக்தியினரினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு - தாமரை தடாக சுற்றுவட்டம் அருகில் நேற்று இரவு மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
ஐக்கிய இளைஞர் சக்தியின் தேசிய அமைப்பாளர் சமித் விஜேயசுந்தரவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இப்போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மயந்த திசாநாயக்க, ஹர்சன ராஜகருணா, ஐக்கிய இளைஞர் சக்தியின் உப தலைவர் ரெஹான் ஜயவிக்ரம, ஐக்கிய இளைஞர் சக்தியின் பௌத்த மத விவகாரங்களுக்கான கொழும்பு மாவட்ட செயலாளர் கோலித குணரத்ன ஆகியோர் உட்பட பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதே வேளை மின்சாரத்தை தடையின்றி வழங்க வேண்டும் என கோரி தமிழர் பிரதேசங்களிலும் தீப்பந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தலைமையில் மட்டக்களப்பு பெரிய கல்லாறு பகுதியிலும் யாழ்ப்பாணம் - செம்மணி வீதியிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான செய்திகளைக் காண்க
மின் தடைக்கு எதிராக மட்டக்களப்பில் தீப்பந்த போராட்டம் (காணொலி)
மின்தடைக்கு எதிர்ப்பு -யாழில் இன்றிரவு போராட்டம் (காணொலி)











