யாழில் படுகொலை செய்யப்பட்டவருக்கு நீதி கோரி உடலத்துடன் வீதிக்கிறங்கிய மக்கள்
Sri Lanka Police
Jaffna
Law and Order
By Sathangani
யாழ்ப்பாணம் (Jaffna) - புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்டவருக்கு நீதி கோரி கொல்லப்பட்டவரின் சடலத்துடன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
புங்குடுதீவு தனியார் போக்குவரத்து சங்கத்தினர் மற்றும் மக்கள் இணைந்து இன்றையதினம் (15) குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கடந்த 10 ஆம் திகதி தனது வீட்டில் இருந்தவேளை வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட ஐயாத்துரை அற்புதராசா (அகிலன்) என்பவரின் கொலைக்கு நீதி வேண்டியும் கொலையாளிகளை விரைந்து கைதுசெய்யக்கோரியும் இந்த போராட்டம் சுமார் இரண்டு மணிநேரம் இடம்பெற்றது.
கறுப்புக் கொடியை பறக்கவிட்டனர்
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்புக் கொடியை பறக்கவிட்டு, பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் புங்குடுதீவு - யாழ்பாணம் இடையேயான போக்குவரத்து சேவைகள் இன்றையதினம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க மயில் தங்க அன்ன வாகன உற்சவம்

மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்