ரணிலின் இல்லத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்! தொடரும் பதற்ற நிலை - காவல்துறை குவிப்பு (காணொளி)
Sri Lanka Police
Srilanka Muslim Congress
Ranil Wickremesinghe
Sri Lankan Peoples
SL Protest
By Vanan
ரணிலின் இல்லத்திற்கு அருகில் போராட்டம்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகில் சுற்றி வளைத்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன்காரணமாக கொழும்பு 7 பகுதியில் இன்று மாலையில் இருந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு
காவல்துறையினர் அங்கு பலத்த பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளதுடன், வீதித் தடைகளையும் அமைத்துள்ளனர். இதனால் குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பிய வண்ணம், பதாதைகளை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.




