மூன்று மாத பிஞ்சுக் குழந்தையை கொன்று புதைத்தது ஏன்...! செம்மணியில் வெடித்த போராட்டம்

Sri Lankan Tamils Jaffna SL Protest chemmani mass graves jaffna
By Sathangani Jun 20, 2025 06:12 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி செம்மணி சந்தியில் இன்று (20) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் செம்மணிப் பகுதியில் காலை 10.00 மணிக்கு இந்த போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வந்தன.

தரம் ஐந்து புலமை பரிசில் நிறுத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

தரம் ஐந்து புலமை பரிசில் நிறுத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நீதி கோரிய போராட்டம்

இந்த நிலையில் இவை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென பலரும் வலியுறுத்தி வந்த நிலையில் செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி இன்று மீண்டும் போராட்டம் இடம்பெறுகின்றது.

இதன்போது ”மூன்று மாதப் பிஞ்சு குழந்தையை மூச்சு அடக்க கொன்றுபுதைத்தது ஏன்?”, ”சித்துபாத்தியில் சிந்தப்பட்ட இரத்ததிற்கு நீதி எப்போது?”, ”காணாமல் போனவர்கள் நினைவாக செம்மணியில் நீதிக்காக நிற்கிறோம்”, ”பதுக்கப்பட்ட உண்மை வெளிக்கொண வேண்டும்" போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூன்று மாத பிஞ்சுக் குழந்தையை கொன்று புதைத்தது ஏன்...! செம்மணியில் வெடித்த போராட்டம் | Protest In Jaffna Justice For Chemman Human Grave

அத்துடன் போராட்டம் நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கடமைகளுக்காகவும் செம்மணி புதைகுழியை பாதுகாக்கும் முகமாகவும் அதிகளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இப் போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

செம்மணி சித்துபாத்தி புதைகுழி அகழ்வில் மொத்தமாக 19 முழுமையான மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணி இம்மாதம் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாகன இறக்குமதி மூலம் சுங்கத்திற்கு கிடைத்த பல பில்லியன் வருமானம்

வாகன இறக்குமதி மூலம் சுங்கத்திற்கு கிடைத்த பல பில்லியன் வருமானம்

கடவுச்சீட்டு பெற செல்லவிருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்

கடவுச்சீட்டு பெற செல்லவிருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்



 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025